வியாழனின்உண்மை படம் வெளியிட்ட Nasa..
நாசாவின் ஜூனோ ஸ்பேஸ்கிராப்ட் ( வியாழன்) jupiter க்கு மிகவும் நெருக்கமாகச் சென்று பல ஆச்சரியமான படங்களை எடுத்து உள்ளது இன்று நாம் அங்கு இதுவரை எடுக்கப்பட்ட சுமார் 19 ஆயிரத்து 800 படங்களில் நம்மை பிரமிக்க வைக்கும் சில படங்களை தான் பார்க்க போகிறோம் 2016 ஆம் ஆண்டு தான் jupiter க்கு நெருக்கமாக சென்றது ஜூனோ இதோ முதல் படம் தனது முதல் சுற்றை வியாழனைச் சுற்றும் போது விண்வெளியில் ஜூனோ வின் பார்வைக்கு நம் பூமியில் எப்படி சூரியன் அடிவானத்தில் உதித்து வருகிறதோ அதே போல சூரிய வெளிச்சத்தில் வியாழன் விண்வெளியில் உதயமாவது தான் தனது முதல் சுற்றில் படம் பிடித்து அசத்திய ஜூனோ இதோ juno எடுத்து அந்த ஆச்சர்ய படம்.
இதோ நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்தப் படமும் ஜூபிடரின் உண்மையான படம்தான் இது பார்க்க ஜூபிடர் போல தெரியாது ஆனால் நாம் ஜூபிடரின் மிக நெருக்கமாக நெருக்கினால் நம் கண்களுக்கு இப்படித்தான் தெரியும் இதில் ஏராளமான மேகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்து கொண்டு சூழல்வதைப் பாருங்கள் ஜூபிடரின் பெரும்பாலான இடம் இதோ இப்படித்தான் இருக்கும் உற்றுக் கவனியுங்கள் அங்கு நடக்கும் உண்மை நிகழ்வுகளை தெளிவாகப் பாருங்கள்.
அதுபோல மிக மிக நெருக்கமாக வியாழன் கிரகத்தை நெருங்கிய juno ஒரு கட்டத்தில் வியாழனின் North pole அதாவது வட துருவத்தை அடைந்தது அப்போது ஜூனோ ஒரு இன்ஃப்ரா ரெட் (அகச்சிவப்பு) படத்தை எடுத்து வெளியிட்டது அப்படியே பார்த்தவுடன் நாம் பிரமித்துப் போவோம் அந்த அளவிற்கு ஆச்சரியமாக இருந்தது ஜூனோ எடுத்த படம்
இதோ ஜூனோ North pole யை அடையும் பொழுது ஜூனோ எடுத்த படம் இதில் தெள்ளத் தெளிவாக நாம் வடதுருவத்தில் நீடிக்கும் கிட்டத்தட்ட பிரம்மாண்டமான 8 சூறாவளி களையும் அதன் நடுவில் நம் பூமியின் சைஸ் பெரிய பிரம்மாண்ட சூறாவளியும் ஜூபிடரின் வாயு மேகத்தை சுழட்டுகிறது பாருங்கள் ஒரு சூறாவளியே நம் பூமி செய்து என்றால் ஜூபிடரின் Size நினைத்து பாருங்கள். இந்த படம் பெப்ரவரி 2 2017 அன்று எடுக்கப்பட்டிருந்தது.
இதேபோல அப்படியே வடதுருவத்தின் எதிர்ப்பக்கமான தென்துருவம் வழியாக ஜூனோ வரும்பொழுது மீண்டும் ஒரு படத்தை ஜூனோ எடுத்திருந்தது வடதுருவம் தான் நம்மை ஆச்சரியப் படுத்தியது என்றால்
தென் துருவமும் சலைக்காமல் மீண்டும் அப்படியே பிரமிக்க வைத்துவிட்டது பாருங்கள்
இதோ இந்தப் படம்தான் இதில் எத்தனை சூறாவளி சிறியது பெரியது என வாயு மேகத்தை புரட்டி புரட்டி எடுக்கிறது பாருங்கள் எத்தனை நிறங்கள் எவ்வளவு பிரமிப்பு அப்பப்பா..
அதன்பின் வெறும் ஒரு சில மணி நேரத்திலேயே ஒரு துருவத்தில் இருந்து அடுத்த துருவம் செல்லும் வரையில் பல படங்களை நெருக்கமாக நெருங்கும் போதெல்லாம் ஆச்சரியமான படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது ஜூனோ இதோ ஜூனோ அனுப்பிய பிரமிப்பான படங்கள்.
இதோ இந்தப் படம்தான் நம்மை அப்படியே வியக்கவைக்க போகிறது இதில் தெளிவாக வியாழன் பூமியைப் போல நிலப்பரப்பைக் கொண்ட கிரகம் அல்ல .
அது எந்தப் பக்கம் பார்த்தாலும் அதன் வாயு மேகங்களை அப்படியே சுழட்டி சுழட்டி அடிக்கும் அடர்த்தியான வாயு(gas) வைத்தான் கொண்டுள்ளது என்று புறியும் நமக்கு.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு எடுத்த இதோ இந்தப் படத்தையும் பாருங்கள் இதில் தொடர்ச்சியாக அங்கு எடுக்கப்பட்ட ஜூபிடரின் கிரேட் ரெட் ஸ்பாட்டின் பல படங்களை ஒன்றாக இணைத்து அங்கு சுழன்று கொண்டிருக்கும் மூன்று பூமி size பெரிய புயல் எப்படி சூழலும் என்று ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள் பாருங்கள்.
மீண்டும் இந்த படத்தையும் பார்த்து விடுங்கள் ஜூனோ வியாழனில் உருவாகும் அரோராவையும் (aurora) விட்டு வைக்கவில்லை அதையும் அற்புதமாக படம் பிடித்து விட்டது இந்த முறையும் இன்ஃப்ரா ரெட் இமேஜ் தான் இதில் தெளிவாக நம் பூமியில் உருவாகும் அரோரா போல நூறு மடங்கு சக்தி வாய்ந்த அரோரா உருவாவதையும் படமெடுத்து பூமிக்கு அனுப்பியது இதோ அந்த அதிசய படம் பார்க்கவே பயங்கரமாக உள்ளது பாருங்கள்.
Leave a Reply